கேரளாவில் பரபரப்பு பினராயை கொல்ல சதி மாஜி காங். எம்எல்ஏ கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக்  கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது  குடும்பத்தினருக்கும் தொடர்பு உண்டு என்று சொப்னா கூறியது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த மாதம்  பினராய் விஜயன் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இண்டிகோ  விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானத்தில் அவருக்கு எதிராக  இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பர்சீன் மஜீத், நவீன்குமார் ஆகியோர்  போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் எம்எல்ஏவும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவருமான சபரிநாதனுக்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர். அவர் திருவனந்தபுரம் சங்குமுகம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சபரிநாதன் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிநாதனை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், விமானத்தில் வைத்து முதல்வர் பினராய் விஜயனை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டியுள்ளனர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: