டி.ராஜேந்தர் குறித்து தவறான செய்தி: சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:  இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து தவறான செய்திகளைப் பரப்பும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகரிடம், அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் மேகநாதன், காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சுரேஷ் ஆகியோர் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றி  அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், சமூக ஊடகங்களில் அவரை பற்றி தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இது எங்களை போன்ற இலட்சிய திமுக தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, இதுபோன்று தவறான தகவல்களை பரப்பும் சமூக ஊடக பக்கங்களை தடை செய்து, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: