கடமலைபுத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு தின விழா நினைவாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மதுராந்தகம்: கடமலைபுத்தூர் ஊராட்சியில், தமிழ்நாடு தின விழா கொண்டாட்டத்தின் நினைவாக மரக்கன்றுகள் நடுப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த கடமலைபுத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு தின விழா நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு ஊராட்சியின் விவசாய பாசன ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார், துணை தலைவர் முரளி முன்னிலை வகித்தார். அப்போது, 200க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஏரி கரையில் நடப்பட்டது. இதில், ஏரி நீர் பாசன தலைவர் லட்சுமி ஆனந்த், ஊராட்சி செயலர் பாபு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், பணித்தள பொறுப்பாளர் வரலட்சுமி, சமூக ஆர்வலர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், கடந்த வருடம் அதே ஏரிக்கரையில் நடப்பட்ட பண விதைகளின் வளர்ச்சி மற்றும் அதன் பராமரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: