எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளரான மார்கரெட் ஆல்வா தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உடன் சென்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வா வேட்பாளராக நேற்று தனது வேட்பு மனுவை மாநிலங்களவையில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியகாங்கிரஸ் தலைவர் சரத்பவார், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சிவசேனாவின் சஞ்சய் ராவத், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி ராஜா மற்றும் மதிமுக எம்பி வைகோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை.

Related Stories: