சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பி.வி. களத்தூர் புதுப்பாக்கம் திருவாணைக் கோயில் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகன் ராதாகிருஷ்ணன் (32). இவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். திருமணம் ஆகாத இவர், அதேபகுதியில், உள்ள ஒரு விவசாய குடும்பத்தினரிடம் நெருங்கி பழகி வந்தார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு உறவினர் போல சென்று வந்துள்ளார்.

சிறுமிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் அதிக வயது வித்தியாசம் இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதற்கிடையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு  வயலுக்கு சென்று வருவதாக சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து,  சிறுமியின் பெற்றோர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த ராதாகிருஷ்ணனை கைதுசெய்தனர். பின்னர், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Related Stories: