×

இலங்கையில் இருந்து 7 பேர் தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடல் மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்த 7 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதிகளைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 2 இலங்கை தமிழர் குடும்பத்தினர் 7 பேர், நேற்று முன்தினம் இரவு, தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு வந்தனர்.

நள்ளிரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு படகு வந்ததும் இலங்கை படகோட்டிகள் நடுக்கடலில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு திரும்ப சென்று விட்டனர். நேற்று அதிகாலை மீன் பிடித்து திரும்பிய மீனவர்கள், இது குறித்து, மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து கடலோர காவல் படை முகாமிலிருந்து ஹோவர் கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்ற காவல்படையினர் வந்து 7 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Sri Lanka ,Dhanushkodi , Sri Lanka, Dhanushkodi, Refugees
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...