சொத்தில் பங்கு கேட்டு மகள்கள் தொடர்ந்த வழக்கு நடிகர் சிவாஜி கணேசன் எழுதிய உயில் உண்மையானது: பிரபு, ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று பாகப்பிரிவினை கோரிய வழக்கில் நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் ஐகோர்ட்டில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்து தொடர்பாக  சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமா சங்கர் ஆஜரானார்.இதையடுத்து ராம்குமார், பிரபு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது. உயிலின் அடிப்படையில் தான் சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டது என்று வாதிட்டார்.

Related Stories: