மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் விடை தாள் நகல் பெறலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் விடை தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள். விடைத்தாளின் நகலினை இன்று நண்பகல் 12:00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை ஜூலை 21 முதல் 25க்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்தில் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல் மேல்நிலை இரண்டாம்(+2) ஆண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், தங்களது தேர்வு கூட நுழைவு சீட்டுகளை இன்று முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories: