×

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் நாவலூர் கிராமத்தில் இடிந்து விழும்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக நாவலூர் ஆலமரத்தெருவில் உள்ள சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்தேக்க  தொட்டியின் மேற்கூறை இடிந்து குடிநீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டது.

இதனால், இந்த குடிநீர் தொட்டி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, தற்போது, இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இதனையடுத்து நாவலூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொளத்தூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்யபட்டு வருகிறது. ஆனாலும், குடிநீர் மற்றும் மற்ற  தண்ணீர்  தேவைகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து நாவலூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை  நீர்தேக்க  தொட்டியின் மேற்பகுதி இடிந்து தொட்டிக்குள் விழுந்ததால் தற்போது, அந்த குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது கடந்த ஒரு மாதகாலமாக நிறுத்தப்பட்டு, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் டிராக்டரில் குடிநீர் வழங்கப்படுகிறது.

டிராக்டரில் வழங்கப்படும் நீர் குடிப்பதற்கு மட்டுமே  போதுமானதாக  உள்ளது. மற்ற தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே, எப்போது  வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க  தொட்டியை  விபத்து ஏற்படும் முன் இடித்து  விட்டு புதிதாக குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Navalur ,Sriperumbudur ,Union , Collapsing overhead water tank in Navalur village of Sriperumbudur Union: Demand for removal and new construction
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு