இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 7 லஷ்கர் தீவிரவாதிகள் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜோரியில் 7 லஷ்கர் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியின் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை ேசர்ந்த 7 தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை ஜம்மு பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

ஏடிஜிபி அளித்த தகவலின்படி, கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 6 கைத்துப்பாக்கிகள், 3 சைலன்சர்கள், 8 கையெறி குண்டுகள், 3 யுபிஜிஎல், 6 கைத்துப்பாக்கிகள், 6 ஏகே ரக துப்பாக்கிகள், 120 தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. தற்போது கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: