×

பால், அரிசிக்கு 5% ஜிஎஸ்டி: பாஜக எம்பி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு, ரொட்டி போன்ற பேக்கேஜ் செய்யப்பட்ட பொருளுக்கு 5% சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பாஜக எம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மகனான பாஜக எம்பி வருண்காந்தி வெளியிட்ட பதிவில், ‘பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு, ரொட்டி போன்ற பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நடுத்தர குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்திவிடும். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டிய நேரத்தில் நாம் அவர்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.



Tags : Bajaka , 5% GST on milk, rice: BJP MP strongly opposed
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...