×

கோவை வங்கியில் ரூ.3.28 கோடி சுருட்டல்: வங்கி ஊழியர்கள் 5 பேர் உள்பட 6 பேர் மீது வழக்கு..சிசிடிவி காட்சி மூலம் மோசடி அம்பலம்..!!

கோவை: கோவையில் செயல்படும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக 6 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை நஞ்சப்பா ரோட்டில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக அனுப்பப்பட்ட பணத்துடன் 98 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை வாங்கி அதிகாரிகளே சேர்த்து வைத்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சேதமடைந்த 1 கோடியே 85 லட்சம் ரூபாய் பணத்தை பண பெட்டக வைப்பு அறைக்கு அனுப்பாமல் கையாடல் செய்ததும் அம்பலமானது.

பழைய நோட்டுகளுடன் சேதமடைந்த 54 ஆயிரத்து 700 ரூபாயை வைத்ததும் தெரியவந்தது. பண வைப்பு அறையில் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை வைத்து 46 லட்சத்தை வங்கி அதிகாரிகள் கையாடல் செய்ததும் தெரியவந்துள்ளது. வங்கி வைப்பு அறையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிக்கு வங்கி காவலாளி கனகராஜ், அலுவலக உதவியாளர் ஸ்ரீகாந்த் உதவியதும் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பான புகாரின் பேரில் வங்கி பணப்பட்டக வைப்பரை பொறுப்பாளர்களான செல்வராஜன், ராஜன், ஜெய்சங்கரின் உள்பட 6 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அலுவலக உதவியாளர் ஸ்ரீகாந்த், எஸ்.பி.ஐ. உள்பட மேலும் 4 வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதால் வங்கியில் சுருட்டிய பணம் வேறு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Gov Bank , Coimbatore Bank, Rs.3.28 Crore rollover
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!