×

சென்னை மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் தமிழ்நாடு பசுமை இயக்க திட்டத்தின் கீழ் 10 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு.: வனத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: சென்னை மண்டலத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகேயிள்ள கரிசங்கால் செங்கல்பட்டு மாவட்டம் சங்தோஷ்புரம், நன்மங்கலம் ஆகிய நாற்றங்கால்களை இன்று (19.072022) வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், வனத்துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் ஆணையின்படி தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பாக நடப்பாண்டு முதல்கட்டமாக 250 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் மட்டுமே லட்சத்து 68 ஆயிரத்து 950 மரக்கன்றுகள் 28 நர்சரிகளில் வளர்க்கப்படுகிறது.

இதில் சென்னை வனக்கோட்டத்தில் 5 நர்சரிகள் மூலம் ஒரு லட்சத்து ஆயிரத்து 500 மரக்கன்றுகளும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் 47 வனக்கோட்டத்தில் 13 நர்சரிகளில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 மரக்கன்றுகளும், திருவள்ளூர் வனக்கோட்டத்தில் 10 நர்சரிகள் மூலம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 250 மரக்கன்றுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதத்தில் மரக்கன்று வளர்ப்பு பணி தொடங்கப்பட்டது. செப்டம்பரில் நடவுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மாநிலம் முழுவதுமுள்ள நெடுஞ்சாலைகள், திருக்கோயில் காலி நிலங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், ஊராட்சிக்கு சொந்தமான காலியிடங்கள் மற்றும் வனப் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. அந்தந்த பகுதி மண் ஊனத்திற்கேற்ப மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. ஆகையால் எந்தப்பகுதியில் எந்த மரம் நன்றாக வளருமோ அதற்கேற்ற மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று ஆய்வின்போது மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திருகாராமசந்திரன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பள்ளிக்கரனை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்கா பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர், இந்த பூங்காவிற்கு அதிக அளவு மக்கள் நடை பயிற்சிக்கு வருவதால் கூடுதலாக 75 கிமீட்டர் நடை பாதை மேம்படுத்த ரூபாய்.20 கோடி மதிப்பிலும், 10 கிமீட்டர் சுற்றுச்சுவர் புதிதாக அமைக்க ரூபாய்40 கோடி மதிப்பிலும், வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் செய்தியாளர்களிடம் இந்த ஆய்வுகளின்போது கூறியுள்ளார்.

சென்னை மண்ட வனப் பாதுகாவலர் கௌ.கீதாஞ்சலி, ஸ்ரீபெரம்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்,. அரவிந்த் ரமேஷ், புனித தோமையார்மலை ஒன்றியக்குழுத் தலைவர் சங்கீதா பாரதிராஜன், சென்னை பெருநகர பெருங்குடி மண்டல குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் திருபாபு , சமீனா செல்வம், சென்னை மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனசீரகர்கள் கலந்து கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார்கள்.


Tags : Chennai , 10 lakh saplings under Tamilnadu green drive scheme in 4 districts of Chennai zone.: Forest Minister informs
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...