கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டுள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: