குளித்தலை அருகே இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு வங்கி சுற்றுச்சுவர்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

குளித்தலை : குளித்தலை அருகே இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு வங்கி நுழைவு சுற்றுச்சுவர் உள்ளது. இதனை அகற்றிவிட்டு புதிதாக சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மருதூர்் பேரூராட்சி பகுதியில் உள்ளது மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இந்த வங்கியில் மருதூர், மேட்டு மருதூர், கூடலூர், பணிக்கம்பட்டி, மேலபணிக்கம்பட்டி, குப்பிரெட்டிப்பட்டி, நடுப்பட்டி, கணேசபுரம், குமாரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாடிக்கையாளராக உள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் பெற கூட்டுறவு வங்கியை நாடுகின்றனர். அதனால் தினந்தோறும் ஏராளமானோர் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கி நுழைவு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விடும் நிலையில் உள்ளது.அதனால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அச்சத்துடனே உள்ளே செல்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: