குன்னூரில் கடும் பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குன்னூர் : குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனி மூட்டத்தால் குன்னூர் -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதிகாலையில்  கேரட்  அறுவடை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.  வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து செல்கின்றன. குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: