×

பண்ருட்டி அருகே பரபரப்பு பள்ளி வகுப்பறை பூட்டில் தார் ஊற்றிய மர்மநபர்கள்-மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி

பண்ருட்டி :  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பூங்குணம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பள்ளியின் அனைத்து கதவுகளையும் ஆசிரியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று சில மர்ம நபர்கள் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதற்காக பள்ளிக்கு வந்து இருந்தனர். அப்போது பள்ளியில் இருந்த சுமார் 3 வகுப்பறைகளின் கதவின் பூட்டுகளில் தார் ஊற்றி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறை கதவின் பூட்டில் தார் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் தார் இருந்ததால் பூட்டை திறக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்பட்டனர். பின்னர் இதுகுறித்து பண்ருட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து பள்ளி வகுப்பறையின் பூட்டை போராடி திறந்தனர். பள்ளி வகுப்பறை கதவின் பூட்டில் யார் தார் பூசியது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Pannruti , Panruti: A panchayat union primary school is functioning in Poongunam panchayat near Panruti in Cuddalore district. Around 200 here
× RELATED கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே...