×

கீழக்குறிச்சி ஊராட்சியில் தேங்கி உள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

வேப்பூர் : வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி ஊராட்சி வடக்கு தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இத்தெருவில் கிராம பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ளது. பள்ளிக்கூடத்திற்கு செல்லும் தெரு என்பதால் நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இந்த தெரு வழியாக சென்று வருகின்றனர்.  இந்நிலையில் இந்த தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் இந்த வழியாக நாள்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கழிவுநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகளும், முதியோர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நீண்ட நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீரால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று உருவாகும் அபாயம் உள்ளதாகவும், அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Keezakurichi , Veypur: More than a thousand people are living in North Street of Keezakurichi Panchayat next to Veypur. Village Panchayat on this street
× RELATED தந்தையை அடித்து கொன்ற மகன்: கிணற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சி