×

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்... இரு அவைகளும் பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி பிரச்சனையை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு, சபாநாயகர் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். விலைவாசி பிரச்சனை குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று, அவர்கள் குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதனையடுத்து அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதேபோன்று மாநிலங்களவை கூடியதும், விலைவாசி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்ததால், அவையில் அமளி மூண்டது. விவாதம் நடத்த பின்னர் நேரம் ஒதுக்குவதாக உறுதியளித்த போதும், அமளி நீடித்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு அறிவித்தார். 


Tags : Houses , Parliament, Opposition, Protest, Bicameral, Adjournment
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்