×

தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை; மா. சுப்ரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கையாக தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய கண்காணிப்பு பணிகளை அவர் ஆய்வு செய்து வருகிறார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஜூலை மாதத்தில் பயணிகள் இடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் நோய் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் யாருக்காவது  குரங்கு அம்மை நோய் தாக்கம் கண்டறியப்பட்டால் அவர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்க ஒரு படுக்கை வசதியுடன் கூடிய கோவை விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கேரள தமிழ்நாடு இடையே 13 பாதைகளில் குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிப்பு பணியில் பொதுசுகாதார துறையினர் ஈடுபட்டுவருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கேரள தெலுங்கானாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டரியப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய  பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்பட்டுருப்பது குறிப்பிடப்பட்டது.


Tags : Tamil Nadu ,Ma. ,Subramanian , Tamil Nadu has no cases of monkey measles so far; Ma. Subramanian interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...