×

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது படகு கவிழ்ந்து 19 பேர் பலி.. 30 பேர் மாயம்!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 20 பேர் பலி; 30 பேர் மாயமாயினர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பயணித்த அந்த படகு இந்தோஸ் ஆற்றில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது, படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகில் பயணித்த 100 பேரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், பலர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை அனுமதித்ததே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pakistan , Pakistan, wedding ceremony, boat, Bali, Mayam
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி