×

மயிலாடுதுறை அருகே பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்..!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செம்பனார்கோயிலில் உள்ள அரசு விற்பனை கூடத்தில், அப்பகுதிகளில் விளைவிக்க கூடிய பருத்தியை, விவசாயிகள் விலைக்கு விற்று வருகின்றனர். இந்நிலையில் பருத்தியை குறைந்த விலைக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்வதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் மூட்டைகளுடன் கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் செய்தனர். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரவிடாமல் தடுத்து, விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பருத்தி ஏலத்தை புறக்கணிக்கும் வியாபாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே முழக்கங்களை எழுப்பி போராடிய விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.      


Tags : Mayeladududurai , Mayiladuthurai, cotton bales, farmers, road blockade
× RELATED சீர்காழி அருகே பழையாறில் டீசல் விலை...