கொடைக்கானலில் போதை காளான் விற்ற கும்பல் கைது

கொடைக்கானல்: கொடைக்கானலில் போதை காளான் விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் போலீசார் மேல்மலை பகுதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி பகுதியை சேர்ந்த சத்யராஜ் (30) உட்பட 6 பேரை போதை காளான் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

கொடைக்கானல் போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த போதை காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடைக்கானல் வரும் வெளிமாநில இளைஞர்கள், ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் மேல்மலை பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி போதை காளான் விற்பனை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: