×

மாணவி மரணம் குறித்து முகநூலில் சர்ச்சை கருத்து அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கைது

பெரம்பலூர்: சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அமைதிப்பேரணிக்கு அழைப்புவிடுத்து முகநூலில் பதிவிட்ட பெரம்பலூர் அதிமுகவை சேர்ந்த 3 பேரை  போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் பள்ளி மாணவி இறப்பு மாணவி இறப்பு தொடர்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் முறையில் பேரணி செல்லவேண்டும் என சமூக வலைதளத்தில் செய்தி பரப்பிய, பெரம்பலூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 8வது வார்டு செயலாளரான சூர்யா (21), அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை 9வது வார்டு செயலாளர் தீபக் (26) ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று 3வதாக அதிமுக நிர்வாகி சுபாஷ் (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.  3 பேரையும் 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் 3பேரும் அடைக்கப்பட்டனர். தென்காசி ரவுடி கைது:  தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலான்குளம் குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன் (27).பிரபல ரவடி. இவர் சின்னசேலம் கலவரம் தொடர்பாக சர்ச்சைகுரிய வாசகங்கள் மற்றும் ஆடியோவை சமூக வலைதளங்களில் தனது நண்பர்களுக்கு பகிர்ந்தாராம். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.



Tags : 3 ,AIADMK ,Facebook , 3 AIADMK officials arrested for controversial comments on Facebook regarding student's death
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...