மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பரிதாப பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

போபால்:  மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பயணிகள் பலியானார்கள். மேலும் 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் நேற்று காலை மத்தியப்பிரதேசம் இந்தூரில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ்சில் சுமார் 32 பயணிகள் பயணம் செய்தனர். ஆக்ரா-மும்பை சாலையில் தேசிய நெடுஞ்சாலை 3ல் உள்ள மேம்பாலத்தின் மீது வந்தபோது, பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைநடுமாறிய பேருந்து பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம்  கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் பஸ் ஆற்றில் மூழ்கியது. வெளியே வரமுடியாமல் பல பயணிகள் உயிரிழந்தனர். அங்கிருந்த கிராம மக்களும் ஆற்றில் குதித்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 15 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலியானோரின் குடும்பத்தினருக்க ரூ2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ50,000 நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Related Stories: