×

அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்: மக்கள் போராட்டத்தை தடுக்க நடவடிக்கை

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாட்டில் அனைத்து கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்து உள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர்  கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் தப்பிச் சென்றார். அங்கிருந்து அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார். சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், புதிய அதிபரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அதிபர் தேர்தல், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இலங்கையில் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று காலை அறிவித்தார். அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், மீண்டும் போராட்டங்களால் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவே இந்த அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல்,சேவைகளைப் பராமரித்தலுக்காக  இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* ரணில் முன்னிலை
இலங்கையிலல் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம் புதிய அதிபரை நாளை தேர்ந்தெடுக்க உள்ளது. அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று நடக்கிறது. ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜேவிபி கட்சி தலைவர் அனுராகுமார திசநாயகே, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிருப்தி அணி தலைவர் டல்லாஸ் அலகபெருமா ஆகியோர் வேட்பாளர்களாக நிற்கின்றனர். ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ரணில் விக்கிரமசிங்கேயை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : presidential ,Sri Lanka , As the presidential election is going to be held tomorrow, Sri Lanka declares a state of emergency again: Action to prevent people's protest
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...