×

முன்விரோதத்தை சமாதானம் செய்ய முயன்றபோது தகராறு வாலிபர் வெட்டி படுகொலை: நண்பர் சீரியஸ்

மதுராந்தகம்: மதுராந்கதம் அருகே முன் விரோதத்தை சமாதானம் பேசி முடித்துக் கொள்ள வந்த இடத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில், உடன் வந்த நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது செம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தை ஒட்டி செல்லக்கூடிய கிளியாற்றுக்கரை பகுதியில் சவுக்கு தோப்பு உள்ளது. இங்கு, நேற்று காலை ஒருவர்  வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும் மற்றொருவர் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் அவ்வழியாக. சென்ற கிராம மக்கள் மேல்மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அங்கு சென்ற மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு  உயிருக்கு போராடி கொண்டிருந்தவரையும், இறந்தவர் உடலையும் மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு குறித்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட நபர் மதுராந்தகம் அடுத்த மேலவளம் பேட்டையை சேர்ந்த அய்யனார்  (35).  உடன் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரமுத்து (36). இருவரும் நண்பர்கள். இவர்களுக்கும் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே பணம் கொடுக்கல், வாங்கல் என தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்த அண்ணாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்ட அய்யனாரையும் அவரது நண்பர் வீரமுத்துவையும் சமாதானம் பேசுவதற்காக செம்பூண்டி கிராமத்தையோட்டி கிளியாற்று கரையோரம் உள்ள சவுக்கு மோப்பிற்கு வரவழைத்து மது அருந்துயபடி, இரு தரப்பும் சமாதானம் பேசி உள்ளனர். அப்போது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர்கள் போதையில் அய்யனாரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். உடன் வந்த வீரமுத்துவையும்  வெட்டியுள்ளனர். இதில், அவரும் இறந்துவிட்டார் என்று நினைத்த கொலையாளிகள், அங்கிருந்து தப்பித்து சென்றது  விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீசார் மேலும், விசாரணை நடத்தியதில்.  அண்ணாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனை கைது செய்யப்பட்டார். இதில், மற்ற இரண்டு பேரையும் போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Sirius , A quarrelsome teenager was hacked to death while trying to reconcile a previous feud: friend Sirius
× RELATED ‘ஆதிபுருஷ்’ உலகமெங்கும் 2 நாளில் ரூ.240 கோடி வசூல்