வினாத்தாள் விவகாரத்தில் பெரியார் பல்கலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பியிடம் பாஜ புகார்

காஞ்சிபுரம்: பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் விவகாரத்தில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி சுதாகரிடம், பாஜ பட்டியலின அணி மாவட்ட தலைவர் சிலம்பரசன் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழக எம்ஏ வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் சாதி ஆணவப் போக்கின் வெளிப்பாடாக குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தும் விதமாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பெயரில் நடைபெறும் பல்கலை கழகத்தில் இவ்வாறான கேள்வி கேட்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இதுபோன்று மாணவர்களிடையே சாதி ஏற்றத்தாழ்வை தூண்டாத வண்ணம் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: