×

எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 15 தேதி தொடங்கி அக்டோபர் 16 தேதி வரை நடக்கிறது. இதில் ஆடித்திருவிழாவிற்காக சுகாதார பணியாளர்களுக்கும், பஸ் நிறுத்த பணியாளர்களுக்கும், தீயணைப்பு ஊழியர்களுக்கும், தற்காலிக தங்கும் கொட்டகைகள் அமைத்தல். பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 9 இடங்களில் சின்டெக்ஸ் பைப்லைன் மற்றும் குழாய் அமைப்பது, நடமாடும் கழிவறைகள் அமைத்தல், மின் விளக்குகள், ஒலி பெருக்கிகள் அமைத்தல், பக்தர்களுக்காக 4 இடங்களில் தங்கும் கொட்டகைகள் அமைப்பது ஆகியவை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

ஆடித்திருவிழாவிற்கு வருகை தரும் வாகனங்களுக்கு வரி வசூலிக்க ஏலம் விடுவது, எல்லாபுரம் ஒன்றியத்திக்கு வடமேற்கு பகுதியில் 91 மீட்டர் நீளத்திற்கு ரூ. 7 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் மதில் சுவர் அமைப்பது, தென்மேற்கு திசையில் 31 மீட்டர் தொலைவில் ரூ.2 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் மதில் சுவர் அமைப்பது, குமரப்பேட்டை மற்றும் பனப்பாக்கம் ஊராட்சியில் கால்வாய் அமைக்க ரூ. 13 லட்சத்து 10 ஒதுக்கீடு செய்வது, திருநிலை, அக்கரப்பாக்கம் ஊராட்சியில் கழிவறை அமைப்பது, கோடுவெளி ஊராட்சியில் சமையல் கூடம் அமைத்தல், சேத்துப்பாக்கம் ஊராட்சியில் கால்வாய் அமைத்தல், மாகரல் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு என மொத்தம் ரூ. 56 லட்சத்து 45 ஆயிரம் ஒதுக்கீடு செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கோகிலா குணசேகரன், ஜமுனா, தனலட்சுமி, கல்பனா, கம்யூ. ரவி, காங்கிரஸ் திருமலை சிவசங்கர், அதிமுக கவுன்சிலர்கள் குழந்தைவேல், சரவணன், வியாலட்சுமி லட்சுமி வேதகிரி, தட்சினா மூர்த்தி, ஜெயலட்சுமி குமார், சியாமளா, புஷ்பா முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   


Tags : Ellapuram ,Union Councilors , Ellapuram Union Councilors meeting
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்