பொன்னேரியில் டென்னிஸ் போட்டி

பொன்னேரி: பொன்னேரியில் டென்னிஸ் போட்டியை நகராட்சித் தலைவர் துவக்கிவைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 15 வார்டு கும்மங்குளம் பகுதியில் ஒரு நாள் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடந்தது.  பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன் ( திமுக) டாஸ் போட்டு போட்டியை நேற்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். ஒரு அணிக்கு ஏழு பேர் வீதம் என நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.12,000 இரண்டாம் பரிசாக ரூ. 8000, மூன்றாம் பரிசாக ரூ. 4000 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. வெற்றிபெற்ற அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர் நல்லசிவம் மற்றும் அருள் ஆகியோர் உடன் இருந்தனர். இப்போட்டிக்கான ஏற்பாட்டை ரவி, லோகேஷ், கோபி, குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

Related Stories: