×

கிருஷ்ணா கால்வாயில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன் பிடிப்பு

ஊத்துக்கோட்டை: கிருஷ்ணா கால்வாயில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ஆர்வத்துடன் மக்கள் மீன் பிடித்து வருகின்றனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு, தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், கண்டலேறுவில் இருந்து வினாடிக்கு 500 கன அடி முதல் 2 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை 8ம் தேதி வந்தடைந்தது. பின்னர் 9ம் தேதி பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றடைந்தது.

இந்நிலையில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்திற்கு செல்லும் தண்ணீர் 2 நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து முதன் முறையாக கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகையில் உள்ள புதிய நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 285 கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் பகுதியில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை கால்வாயில் தண்ணீர்  தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் வலை மற்றும் தூண்டில் போட்டும் மீன் பிடித்து வருகின்றனர்.

Tags : Krishna Canal , Fishing in stagnant water in Krishna Canal
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு