×

பேரம்பாக்கத்தில் கண் பரிசோதனை முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப், லியோ கிளப் மற்றும் சென்னை மிஷன் பார் விஷன் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து பேரம்பாக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மாதந்தோறும் 3 வது ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய் கண்டறிதல் முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி, நேற்று நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில், கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் 21ம்தேதி சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முகாமிற்கு வந்த அனைவருக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் லயன் எம்.பன்னீர்செல்வம், லயன் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags : Perambakkam , Eye examination camp at Perambakkam
× RELATED கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது