×

மாநகர பஸ் டிரைவருக்கு அடி-உதை கண்டக்டர், டிரைவர்கள் போராட்டம்: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: மாநகர பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி டிரைவர்களும் கண்டக்டர்களும் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தி.நகரில் இருந்து மாநகர பேருந்து நேற்று காலை திருவள்ளூர் நோக்கி சென்றது. பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தை சேர்ந்த துரை டிரைவராக இருந்தார். கண்டக்டராக செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த காத்தவராயன் (50) பணியாற்றினார். திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது அங்குள்ள ஸ்டாப்பில் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் கடும் ஆத்திரம் அடைந்ததுடன் அந்த பஸ்சை மறித்து வாக்குவாதம் செய்து  டிரைவர் துரையை தகாத வார்த்தையால் பேசி தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.

இதனால் அங்கேயே பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவரும் கண்டக்டரும் போராட்டம் நடத்தினர். இதுபற்றி கேள்விப்பட்டதும் மற்ற டிரைவர்களும் கண்டக்டர்களும் ஆங்காங்கே பஸ்களை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் பயணிகள் அனைவரும் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டதால் நடந்து சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாநகர பஸ் டிரைவர் கண்டக்டர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்கிறோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டனர். பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் கடும் ஆத்திரம் அடைந்ததுடன் அந்த பஸ்சை மறித்து வாக்குவாதம் செய்து டிரைவர் துரையை தகாத வார்த்தையால் பேசி தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.

Tags : City Bus ,Thiruvallur , Conductor kicks city bus driver, drivers protest: Bust near Tiruvallur
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...