×

அடைக்கலம் தர சிங்கப்பூர் மறுப்பு: மீண்டும் இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே?

சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளதால் அவர் விரைவில் கொழும்பு திரும்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக மக்களின் எழுச்சி மிகு கிளர்ச்சி எதிரொலியாக கடந்த 13ம் தேதி நாட்டை விட்டு தப்பி சென்றார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே. மாலத்திதீவுக்கு சென்ற கோத்தபயவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அவரை நாட்டுக்குள் அனுமதித்த சிங்கப்பூர் அரசு அடைக்கலம் தர திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்நிலையில் கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கப்பூரிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் முன்னாள் அதிபர் கோத்தபயவையும், அவரது மனைவியையும் நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோத்தபயவின் மகன் அமெரிக்காவில் உள்ள நிலையில் அங்கு செல்ல அவர் விரும்ப விலை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் இலங்கை திரும்ப உள்ளதாக தெரிகிறது. சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லவிருக்கும் கோத்தபய அங்கிருந்து கொழும்பு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Singapore ,Gotabaya Rajapakse ,Sri Lanka , Singapore's refusal to grant asylum: Gotabaya Rajapakse returns to Sri Lanka?
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...