×

கொடைக்கானலில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அதிரடி

கொடைக்கானல்: கொடைக்கானலில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர். கொடைக்கானலில் யானை தந்தங்களை சிலர் விற்பனை செய்யவிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தீலிப் உத்தரவின் பேரில் வனச்சரகர்கள் அடங்கிய தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கொடைக்கானல் அருகே பெருமாள் மலை பகுதியில் கேரள மாநிலம் பதிவெண் கொண்ட சொகுசு கார் சந்தேகப்படும் வகையில் சுற்றி வந்துள்ளது.

இதனை, பின்தொடர்ந்து வந்த மதுரை பதிவெண் கொண்ட காரில் இருந்தவர்கள் யானை தந்தங்களை கேரள இளைஞர்களிடம் விற்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சுற்றி வளைத்த வனத்துறையினர் ராஜ்குமார், பிரகாஷ், சந்திரன் மற்றும் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த சிபின் தாமஸ், மலப்புறத்தை சேர்ந்த அப்துல் ரசித் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 யானை தந்தங்கள், 2 கார்கள், நாட்டு துப்பாக்கி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததால் அவர்கள் யானையை வேட்டையாடி தந்தங்களை எடுத்து வந்தார்களா என்ற கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kodaikanal , Kodaikanal, elephant tusks, sale, arrest, patrol, forest department, action
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...