×

டெல்லி போலீஸ் நூதன முயற்சி: சிக்னல் லைட்டில் கரீனா கபூர் பாடல்

புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, டிராபிக் சிக்னல் லைட்டில் கரீனா கபூர் பாடிய பாடல் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. டெல்லி காவல்துறை டிவிட்டரில் வெளியான வீடியோஒன்றில், கார் ஒன்று வேகமாக செல்கிறது. சில நொடிகளில் டிராபிக் சிக்னல் லைட்டில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் முகம் தெரிகிறது. அப்போது கரண் ஜோஹரின் ‘கபி குஷி கபி கம்’ படத்தில் இடம்பெற்ற கரீனா கபூரின் (பூ) இந்தி பாடல் வரிகள் இடம்பெறுகிறது.

போலீசார் வெளியிட்டுள்ள பதிவில், ‘போக்குவரத்து விதிகளை மீறுவது யார்? பூவுக்கு (கரீனா கபூர்) கவனமாக இருப்பது பிடிக்கும். எனவே, டிராபிக் சிக்னல்களைப் பார்த்துவிட்டு செல்லுங்கள்’ என்ற அர்த்தத்தில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. டெல்லி காவல்துறையின் புதுமையான இந்த தொழில்நுட்பத்தை பலர் பாராட்டியுள்ளனர். டெல்லியில் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த, நூதன முறையில் நடிகையின் பாடலை டெல்லி போலீசார் ஒலிபரப்பி வருகின்றனர். இதற்கு சில நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவு வெளியிட்டுள்ளனர்.



Tags : Delhi Police ,Nutana ,Kareena Kapoor , New attempt by Delhi Police: Kareena Kapoor song from Signal Light
× RELATED மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில்...