வரலட்சுமிக்கு மீண்டும் கொரோனா

சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, தற்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘இரவின் நிழல்’ படம் திரைக்கு வந்தது. இந்நிலையில், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு தேறிய அவர், தற்போது மீண்டும் தன்னை கொரோனா தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளர். இதுபற்றி நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில், ‘நான் எடுத்து வந்த எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி தற்போது எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

படப்பிடிப்பில் பணியாற்றுகின்ற அனைவரும் மாஸ்க் அணிவதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்ய வேண்டும். காரணம் நடிகர், நடிகைகளால் மாஸ்க் அணிந்துகொண்டு நடிக்க முடியாது. சமீப நாட்களில் என்னை நேரில் சந்தித்தவர் கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள்  உடனே தங்களை பரிசோதித்துக் கொள்ளவும். கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். இன்னும் கொரோனா இருக்கிறது. எனவே, அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்று பேசியுள்ளார்.

Related Stories: