கேரள தலைமை செயலகத்தில் ஷூட்டிங் நடத்த தடை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டசபை அமைந்துள்ள தலைமை செயலக வளாகத்தில், இனிமேல் சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று அந்த மாநில அரசு தடைவிதித்து இருக்கிறது. மக்கள் நெருக்கம் அதிகமான பகுதியாக இருப்பதாலும், மக்கள் மற்றும் அரசுப் பணிகள் தடையின்றி நடக்கவும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தலைமை செயலக வளாகம் உயர் பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால்,  தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: