மாற்றுத்திறனாளிகள் முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  வேலை செய்ய பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் 2வது செவ்வாய் கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில், நாளை காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இணை இயக்குநர், திட்ட இயக்குநர்  முன்னிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடக்கிறது.எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரிய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகள் ஏதுமிருப்பின் குறைகேட்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Related Stories: