×

போலி ஆவணங்கள் மூலம் தியாகியின் நிலம் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்க ஆர்டிஓவிடம் புகார்

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் போலி ஆவணங்கள் மூலம் சுதந்திர போராட்ட தியாகியின் நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தியாகியின் மகன் ஆர்டிஓவிடம் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 1வது வார்டிற்குட்பட்ட காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன் (45):  இவரது தந்தை கோகுலபதி. இவர் சுதந்திர போராட்ட தியாகி. இவர், கடந்த 2001ம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

இவர், 1964ம் ஆண்டு காக்கநல்லூர் கிராமத்தில் சுமார் 60 சென்ட் புஞ்சை நிலத்தினை அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமுலுவிடம் இருந்து வாங்கினார். இதனை, தனது நிலங்களுடன் சேர்த்து பயிர் செய்து வந்துள்ளார். இவரது மகன் ஆனந்தன் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிழைப்பிற்காக சென்னைக்கு சென்று கூலி வேலை செய்து குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் சொந்த ஊரான காக்கநல்லூர் கிராமத்திற்கு திரும்பியபோது அங்கு ஆனந்தன் நிலத்தில் யாரோ பயிரிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இது குறித்து நேரில் சென்று கேட்டபோது தனது தந்தையார் பெயரில் கிரைமாக கொடுத்த உள்ளூர் நபரின் வாரிசுகள் கூட்டாக போலி பத்திரங்களை தயார் செய்து உத்திரமேரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரங்களைக் கொண்டு வேறு நபர்களுக்கு நிலத்தை விற்பனை செய்தாக கூறப்படுகிறது.  சுதந்திர போராட்ட தியாகியின் மகனான ஆனந்தன் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.  உடனே நிலம் குறித்த உரிய ஆவணங்களுடன் காஞ்சிபுரம் கோட்டாட்சியர், மாவட்ட பதிவாளர் மற்றும் உத்திரமேரூர் சார்பதிவாளரிடமும் தனக்கு சொந்தமான நிலத்தை போலிப் பத்திரத்தின் மூலம் பத்திர பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரியும் தனது நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகாரளித்துள்ளார்.



Tags : Tyagi ,RTO , Tyagi's land grab through fake documents: Complaint to RTO to take action
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...