பூஜை அறையில் விளக்கு ஏற்றியபோது சேலையில் தீ பிடித்து எம்எல்ஏ மாமியார் பலி

திருவள்ளூர்: வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றும்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீபிடித்து திருத்தணி எம்எல்ஏ மாமியார் உடல் கருகி உயிரிழந்தார்.சென்னை சூளைமேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சகுந்தலா(81). இவர் திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் மாமியார். இவர், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள பூஜை அறையில் வழிபாடு செய்வதற்காக விளக்கு ஏற்றினர். அப்போது எதிர்பாராத விதமாக விளக்கில் இருந்த தீ சேலையில் பிடித்தது. நைலான் சேலை என்பதால் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் வீட்டிற்குள் தீ பிடித்த நிலையில் அங்கும் இங்கும்

ஓடினார்.

அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து சகுலந்தா மீது பரவியிருந்த தீயை அணைத்து காப்பாற்றினர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் முழுவதும் 90 சதவீதம் தீக்காயங்களுடன் சகுலந்தா அபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: