×

ஜி.கே.வாசன் வலியுறுத்தல் மாணவி மரணத்தில் முறையான விசாரணை தேவை

சென்னை: சின்ன சேலம் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த விவகாரத்தில் காவல்துறையினர் முறையான விசாரணை செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்துவந்த நிலையில் மர்மமான முறையில் இறந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

உடற்கூறு ஆய்வில் அவர் இறப்பதற்கு முன்னரே பல்வேறு காயங்கள் அடைந்திருப்பதாகவும் இன்னும் சில பரிசோதனைகள் நிலுவையில் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக நீதிக்கேட்டு போராட்டதில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறை முறையான விசாரனையை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : GG K. Vasan , GK Vasan insists proper inquiry into student's death
× RELATED ஜி.கே.வாசன் வலியுறுத்தல் பாலியல் தொல்லை அளிப்பவர்களை தூக்கிலிட வேண்டும்