×

பேஸ்புக்கில் மத அவதூறு கருத்து: வங்கதேசத்தில் கோயில் இடிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் மத அவதூறு கருத்துக்கு எதிராக இந்து கோயில் இடித்து சேதமாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் ஹரன் என்பவர் தனது பேஸ்புக் பதிவில் இஸ்லாம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நராலி மாவட்டத்தின் சகாபாரா கிராமத்தில் உள்ள இந்து கோயிலை மர்மநபர்கள் இடித்து சேதப்படுத்தினர். அங்கு இருந்த பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மேலும் அங்கு இருந்த இந்துக்களின் கடைகள், வீடுகள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கி சூடு நடத்தி கலைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

Tags : Facebook ,Bangladesh , Religious blasphemy comment on Facebook leads to temple demolition in Bangladesh
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...