திருச்சியில் பயங்கரம் மகள் காதலுக்குஎதிர்ப்பு தெரிவித்த தாய் வெட்டிக்கொலை: காதலன் கைது

திருச்சி: திருச்சியில் மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் சையது. இவரது மனைவி சாய்தாபேகம்(35). ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15ம்தேதி வீட்டில் சாய்தாபேகம் அலறும் சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் திரண்டபோது வீட்டின் ஓடுகளை பிரித்து கொண்டு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி வெளியேறி தப்பி சென்றார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெட்டு காயங்களுடன் சாய்தாபேகம் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்த ஜோசப்ராஜ்(எ) மணிகண்டன்(24) என்பவர் தான் சாய்தாபேகத்ைத வெட்டியது தெரியவந்தது. வெளிநாடு சென்று திரும்பிய ஜோசப்ராஜ், சாய்தாபேகத்தின் மூத்த மகளை காதலித்துள்ளார். இதற்கு சாய்தாபேகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடன் ஜோசப்ராஜ் தகராறில் ஈடுபட்டு வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து ஜோசப்ராஜை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சாய்தாபேகம் இறந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: