ஒரு நாள் தொடர் 3வது போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி; தொடரை கைப்பற்றி அசத்தல்

கயானா: வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் வென்றது. இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டி கயானாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 48.4 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் நிகோலஸ் பூரன் 73 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

வங்கதேச அணியில் தஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டும், நசும் அகமது, முஸ்தபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணியில் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தமிம் இக்பால் 34 ரன், விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் 32 ரன்கள் எடுத்தனர். இறுதியில் வங்கதேசம் 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேசம் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது தஜுல் இஸ்லாமுக்கும், தொடர் நாயகன் விருது தமிம்இக்பாலுக்கும் வழங்கப்பட்டது.

Related Stories: