×

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை, வாங் ஸி-ஐ 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

சிங்கப்பூர் ஓபன்  சிங்கப்பூரில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் சயனா கவாகாமியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் சீன வீராங்கனை வாங் ஸி-ஐ 21-9, 11-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வெண்டார். சர்வதேச அளவிலான WTA 500 தொடர்களில் பி.வி.சிந்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் நடப்பாண்டில் பி.வி.சிந்து கைப்பற்றியுள்ள 3-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

Tags : Singapore Open Badminton Tournament ,BV Sindhu , Indian BV Sindhu won the Singapore Open Badminton Championship
× RELATED போர்ப்ஸ் பட்டியலில் 16வது இடத்தில் பி.வி.சிந்து