காவிரி ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்: பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்பு

மேட்டூர்: ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் வெளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் பெரும் போரட்டத்திற்கு பிறகு  பத்திரமாக மீட்கப்பட்டனர்.  சேலம் மேட்டூர் அணையிலிருந்து மாலையில் 1,13,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் ஆபத்தை உணராமல் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் சில நிமிடங்களில் நீர்வரத்து அதிகரித்ததால் பாறையில் மீது நின்றிருந்த 3 இளைஞர்களும் கரைக்கு வர முடியாமல் திணறினர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்,காவல் துறையினர் 3 இளைஞர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் மீட்புக்குழுவினருக்கு சவால் ஏற்பட்டது. இதனால் பதற்றமும் அதிகரித்தது. பின்னர் கயிற்றில் கல்லைக்கட்டி இளைஞர்களிடம் வீசினர்.

அவர்கள் கயிற்றை பிடித்து கொள்ள மீட்புக்குழுவினர் கயிற்றை பிடித்தபடி சென்றனர். பின்னர் இளைஞர்கள் இடுப்பில்  கயிற்றை கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்து அடுத்தடுத்து இளைஞர்கள் பத்திரமாக கரை சேர்ந்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தாரமங்கலத்தை சேர்ந்த 3 இளைஞர்களும் மீட்கப்பட்ட நிலையில் மீட்புக்குழுவினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். அதே நேரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆபத்தை உணராமல் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories: