×

பாராசின் ஓபன் 'ஏ' 2022 செஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா!

பெல்கிறேட்: செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் ஏ 2022 செஸ் தொடரில் ரஷ்ய வீரர் அலெக்ஸ்சாண்டர் பிரெட்கேயை விட அதிக புள்ளிகளை பெற்று இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.

பாராசின் ஓபன் செஸ் தொடர் செர்பியாவில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ், காசிபெக் நோகர்பெக், சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் ஆகியோரை இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.  

இதையடுத்து மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் 7 வெற்றி, 2-டிரா உள்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் சென்னையில் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா பி அணியில் பிரக்ஞானந்தா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாராசின் ஓபன் செஸ் தொடரில் வெற்றி பெற்ற இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Tags : India ,Pragnananda ,Parasin Open ' , India's young grandmaster Pragnananda has won the Parasin Open 'A' 2022 chess series!
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...