கேரளாவில் யானைகளுக்கான புத்துணர்வு சிகிச்சை முகாம் பூஜையுடன் தொடக்கம்:பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் வருகை

திருச்சூர்: கேரளாவில் கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு சிகிச்சை முகாம் பூஜையுடன் துவங்கியுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நாதன் சிவன் கோவிலில் 40- வதுஆண்டாக கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இங்கு வரக்கூடிய யானைகள் அனைத்தும் பல்வேறு கோவில்களில் உள்ள வளர்ப்பு யானைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான யானைகளும் இங்கு வருகின்றன.

இந்த ஆண்டின் சிறப்பானது ஆசியாவிலேயே மிக பெரிய யானையான செத்திக்கோட்டு ராமச்சந்திரன் கலந்து கொண்டுள்ளது. தற்போது வடக்கு நாதன் சிவன் கோவிலில் தெற்கு நடை இருக்கக்கூடிய பகுதிகளில் யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. யானைகள் அனைத்திற்கும் சற்று நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் மற்றும் யானைகளை பார்த்து ரசிக்க கூடிய ரசிகர்களும்  தங்களுக்கு பிடித்தமான யானைகளுக்கு உணவுகளை அளித்து புத்துணர்வு முகாம் நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறார்கள்.

இந்த யானைகள் அனைத்தும் எதிர் வரக்கூடிய ஒரு மாதத்திற்கு ஓய்வு அளிக்கப்படும். அதைப்போல் யானைகளுக்கு சிகிச்சைகளும் அளிக்கப்படும். மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் கோவிலில் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் தனியார் சொந்தமான யானைகளுக்கும் பெரும்பாலும் கேரளாவில் இருக்கக்கூடிய யானைகள் அனைத்தும் ஆண் யானைகளாக இருப்பதால் மழை மற்றும் குளிர் காலங்களில் மஸ்த் எனும் நீர் வழியக்கூடிய காலமாகவும், யானைகள் இந்த மாதங்களில் பாகன்களுக்கு கட்டுபடாத காலக்கட்டம் என்பதால் முழுமையான ஓய்வும்,யானைகளுக்கு தேவையான சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்க பட உள்ளது.  

Related Stories: