×

ரசிகர்களைப் போலவே கேரக்டரும் சிந்திக்க முடியாது: விஜய் சேதுபதி

சென்னை: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படம், கடந்த ஜூன் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது: ‘மாமனிதன்’ படத்தில் கதாநாயகன் ஊரை விட்டு ஓடிவிடுகிறாரே என்று இயக்குனரிடம் கேள்வி கேட்டது போல் என்னிடமும் கேட்டார்கள். நான் அவர்களுக்கு பதில் சொல்லவில்லை. அவர்கள்  சிந்திப்பது போலவே கதாபாத்திரமும் சிந்திக்க வேண்டும் என்று நினைத்தால், படத்தை எப்படி பார்க்க முடியும் என்று தெரியவில்லை. இது மிகவும் எளிமையான படம். கதாநாயகன் எளிமையான மனிதன். எனவே, இந்தப் படத்துக்கு  விளக்கம் கொடுப்பது அவசியமற்றது என்று நினைக்கிறேன். சில படங்களை அந்த நேரத்தில் கொண்டாட தவறி விடுவோம். காலம் கடந்த பிறகுதான் அது தெரியும். இந்தப் படமும், ராதாகிருஷ்ணனும் எப்போதுமே மனதில் இருப்பார்கள். இது பழைய படமாகாது என்று உறுதியாக நம்புகிறேன்.

Tags : Vijay Sethupathi , Character cannot think like fans: Vijay Sethupathi
× RELATED திருட்டு பாடம் விஜய் சேதுபதி வௌியிட்ட டீசர்